6th TAMIL - ஒளி பிறந்தது - Education Murasu Materials

Latest

Sunday, November 23, 2025

6th TAMIL - ஒளி பிறந்தது

  


அப்துல் கலாம்

  1. குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர்.
  2. எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு அதை அடைய வேண்டும் என்றவர்.
  3. மாணவர்கள் முன்னேறப் பல வழிகளை எடுத்துச் சொன்னவர்.
  4. இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் குழந்தைகள் தான் என்று கூறியவர்.
  5. அறிவியலின் அடிப்படை கேள்விகள் கேட்டல் என்று கூறியவர்.
  6. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான் என்று கூறியவர்.
  7. மாணவர்களாகிய நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றாலும் குறிக்கோளை மனதில் கொள்ளுங்கள் என்றவர்.
  8. கடின உழைப்பால் வெற்றியடையுங்கள்ற என்றவர்.
  9. உங்கள் வெற்றி இந்தியாவுக்கு உதவும் என்றவர்.
  10. அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனமுடன் கேளுங்கள் என்றவர்.
அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல்கள்
  • திருக்குறள்
  • விளக்குகள் பல தந்த ஒளி (LIGHTS FROM MANY LAMPS).
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கீழ்க்கண்டவற்றுள் அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல்

அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) நாலடியார்

2. லிலியன் வாட்சன் எழுதியுள்ள நூல்

அ) விளக்குகள் பல தந்த ஒளி
ஆ) ஆசிய ஜோதி
இ) மனோன்மனியம்
ஈ) வெற்றிகள் தந்த ஒளி

3. எந்த நூலைப் படிக்கும்போது கலாமுக்கு “அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி” ஆகிய மூன்றையும் தந்தது.

அ) திருக்குறள்
ஆ) விளக்குகள் பல தந்த ஒளி
இ) ஆசிய ஜோதி
ஈ) வெற்றிகள் தந்த ஒளி

4. கீழ்க்கண்டவற்றுள் அப்துல் கலாமுக்கும் விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலுக்கும் தொடர்பில்லாத ஒன்று. 

அ) அறிவு
ஆ) தன்னம்பிக்கை
இ) விடா முயற்சி
ஈ) மகிழ்ச்சி

5.  அப்துல் கலாம் உருவாக்கிய செயற்கைக் கால்களின் எடை.

அ) நூறு கிராம்
ஆ) இருநூறு கிராம்
இ) முந்நூறு கிராம்
ஈ) எழுநூறு கிராம்

6.  அப்துல் கலாம் எதனைக் கொண்டு செயற்கைக் கால்களை உருவாக்கினார்.

அ) செப்புத்தகடு
ஆ) நெகிழி
இ) கார்பன் இழை
ஈ) அலுமினியம்

7. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறி இருப்பான் என்று கூறியவர்.

அ) அப்துல் கலாம்
ஆ) சந்திரசேகர வெங்கட ராமன்
இ) விக்ரம் சாராபாய்
ஈ) கல்பனா சாவ்லா

8. உலகின் முதல் விஞ்ஞானிகள்.

அ) ஆசிரியர்கள்
ஆ) அறிவியல் அறிஞர்கள்
இ) பெற்றோர்கள்
ஈ) குழந்தைகள்

9. உலகின் முதல் விஞ்ஞானிகள் குழந்தைகள் என்று கூறியவர்.

அ) அப்துல் கலாம்
ஆ) சந்திரசேகர வெங்கட ராமன்
இ) விக்ரம் சாராபாய்
ஈ) கல்பனா சாவ்லா

10. நிலவுக்கு இந்தியா அனுப்பிய ஆளில்லாச் செயற்கைக் கோளின் எடை. 

அ) 552 கிலோ
ஆ) 525 கிலோ
இ) 225 கிலோ
ஈ) 535 கிலோ