தமிழ் இலக்கிய வினா விடைகள் 150 Tamil Ilakkiyam - Education Murasu Materials

Latest

Sunday, November 30, 2025

தமிழ் இலக்கிய வினா விடைகள் 150 Tamil Ilakkiyam

 



1. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?

விடை: கலித்தொகை, பரிபாடல் 


2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?

விடை: பரிமேலழகர் 


3. உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் எது?

விடை: பரிபாடல் 


4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 


5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

விடை: சி.வை தாமோதரம் பிள்ளை 


6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை கொண்ட திணை எது?

விடை: முல்லை திணை 17 பாடல்கள் 


7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 


8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை 


9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 


10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் யாது?

விடை: கலித்தொகை  


11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய மதம் எது?

விடை: பௌத்தம் 


12. தமிழில் எழுதப்பட்ட முதல் ஐந்திலக்கண நூல் எது?

விடை: வீரசோழியம் 


13. சந்திரகுப்தன் காலத்தில் பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?

விடை: சமணம் 


14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட முதல் உரைநடை நூல் எது?

விடை: ஸ்ரீ புராணம் 


15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

விடை: மண்டலபுருடர் 


16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர் யார்?

விடை: சேகனாப்புலவர்


17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில் இஸ்லாம் மதம் பரவியது?

விடை: மாலிக்கபூர்


18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல் மற்றும் காப்பிய நூல் எது?

விடை: சீறாப்புராணம் 


19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர் யார்?

விடை: காசிம் புலவர்


20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?  

விடை: சவ்வாது புலவர் 


21. காமனின் தம்பி யார்?

விடை: சாமன் 


22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை


23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: பரிபாடல்


24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் எது?

விடை: கலித்தொகை


25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?

விடை: கலித்தொகை


26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 


27. ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?

விடை: அகநானூறு 


28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?

விடை: அகநானூறு 


29. வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?

விடை: பரணர், மாமூலர் 


30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 


31.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை

விடை: 12


32.அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு

விடை:  வேள்விக்குடிச் செப்பேடு


33.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்
விடை: பாலைத்திணை


34.அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்

விடை: நெய்தல்திணை


35.அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  குறிஞ்சித்திணை


36.அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள்

விடை: முல்லைத்திணை


37.அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  மருதத்திணை


38.அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

விடை: நோய்பாடியார், ஊட்டியார்


39.அகநானூற்றின் அடிவரையறை

விடை: 13-31 அடிகள்


40.அகநானூற்றின் இரண்டாம் பகுதி

விடை: மணிமிடைப்பவளம்


41.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள்

விடை: வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை


43.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை

விடை: 90


44.அகநானூற்றின் பிரிவுகள்

விடை: 3 (களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை)


45. அகநானூற்றின் முதல் பகுதி

விடை:களிற்றுயானை நிரை


46. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்

விடை:வே.இராசகோபால் 16.


47.அகநானூற்றின் மூன்றாம் பகுதி

விடை: நித்திலக்கோவை


48. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்

விடை: நெடுந்தொகை


49. அகநானூற்றைத் தொகுத்தவர்

விடை: உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்


50. அகநானூற்றைத் தொகுப்பித்தவன்

விடை: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி


51. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள்

விடை:  கலிப்பா,பரிபாடல் (தொல்காப்பியர்)


52. அகராதி நிகண்டு ஆசிரியர்

விடை: சிதம்பரம் வனசித்தர்


53. அகலிகை வெண்பா நூலாசிரியர்

விடை: சுப்பிரமணிய முதலியார்


54. அசோகன் காதலி நாவலாசிரியர்

விடை: அரு.ராமநாதன்


55. அசோமுகி நாடக ஆசிரியர்

விடை: அருணாசலக் கவி


56. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்

விடை: தழிஞ்சி


57. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்

விடை: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து


58. அடிநூல் ஆசிரியர்

விடை: நத்தத்தனார்


59.  அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்

விடை: பொன்னப்ப காங்கேயன்


60. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்

விடை: திருக்குறள்


61. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர்

விடை: ஔவையார்


62.அந்தகக் கவிராயர் எழுதிய உலா

விடை: திருவாரூர் உலா

63.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்

விடை: பதிற்றுப்பத்து -நான்காம் பத்து


67.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

விடை: ஆலாபனை – 1999


68. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம்

விடை:  அரு.இராமநாதன்


69. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர்

விடை: மறைமலையடிகள் 


70. அம்பிகாபதி கோவையைப் பாடியவர்

விடை: அம்பிகாபதி


71.இடைக்காலத்தில் தோன்றிய நாடகம்

விடை: குறவஞ்சி


72. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள்

விடை: 3700


73. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்

விடை: 59


74. இடைச்சங்க இலக்கியங்கள்

விடை: அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,
பூதபுராணம், இசைநுணுக்கம்


75. இடைச்சங்கம் இருந்த இடம்

விடை: கபாடபுரம்


76. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள்

விடை: 3700


77. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்

விடை: கலித்தொகை


78. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்

விடை: வைரமுத்து


79. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று

விடை: பழந்தமிழர் கண்டுபிடிப்பு


80.இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல்

விடை: துர்க்கேச நந்தினி (1865)


81. இந்தியா எனும் இதழ் நடத்தியவர்

விடை: பாரதியார்


82. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்

விடை: இந்திரகாளியர்


83. இந்திராயன் படைப்போர் எழுதியவர்

விடை: புலவர் அலியார்


84. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
விடை: புறநானூறு


85. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்

விடை: பிங்கலம்


86.இயற்பா, இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்

விடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்


87. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை

விடை:470


88. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்

விடை: படிக்காசுப் புலவர்


89. இரட்சணிய குறள் எழுதியவர்

விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


90.இரட்டைப் புலவர்கள் பாடிய உலா

விடை: ஏகாம்பரநாதர் உலா


91. இரட்டைப் புலவர்களின் பெயர்

விடை: இளஞ்சூரியன்,முதுசூரியன்


92.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்

விடை:  மருதூர்


93.இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு

விடை: திருவருட்பா


94. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்

விடை:  சுப்பிரமணிய முதலியார்


95. இராமானுச நூற்றந்தாதி பாடியவர்

விடை: அமுதனார்


96. இராவண காவியம் நூலாசிரியர்

விடை: புலவர் குழந்தை


97. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு

விடை: கி.பி.10-ஆம் நூற்றாண்டு


98. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்

விடை: திருக்குறள்


99.இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல்

விடை: பதிற்றுப் பத்து


100.இருவகை நாடகம்

விடை: இன்பியல், துன்பியல்


101.இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி

விடை: பாணினி


102.இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர்

விடை: சிவஞான முனிவர்


103.இலக்கண விளக்கம் நூலாசிரியர்

விடை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்


104. இலக்கணக் கொத்தின் ஆசிரியர்

விடை:  சுவாமிநாத தேசிகர்


105.இலக்கிய உதயம் நூலாசிரியர்

விடை: எஸ்.வையாபுரிப் பிள்ளை


106. இலக்கியம் இதழாசிரியர்

விடை: சுரதா


107.இலங்கேசுவரன் நாடக ஆசிரியர்

விடை: ஆர்.எஸ்.மனோகர்


108. இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர்

விடை: சாத்தனார்


109. இறந்த மறவன் புகழை பாடுதல்

விடை: மன்னை காஞ்சி


110.வெட்சி

விடை: நிறைகவர்தல்


111.வெண்டேர்ச் செழியனின் காலம்

விடை: இடைச்சங்க காலம்


112.வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர்

விடை: வச்சநந்திமாலை


113.வெறியாட்டு

விடை:  வள்ளிக் கூத்தாடுவது


114.வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர்

விடை: அகிலன்


115.வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர்

விடை: இரேனியஸ்


116.வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர்

விடை: சரபோஜி மன்னர்


117.வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல்

விடை: நீதிநூல்


118.வேய்

விடை: உளவு- ஒற்றாராய்தல்


119.வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்

விடை: ராஜம் கிருஷ்ணன்


120. வைகறைப் பொழுதுக்குரிய நிலம்

விடை: மருதம்


121. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்

விடை: ஆறுமுக நாவலர்


122. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல்

விடை: புறநானூறு


123. ஜீவகாருண்யம் போதித்தவர்

விடை: வள்ளலார்


124. ஜீவபூமி நாவலாசிரியர்

விடை: சாண்டில்யன்


125. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர்

விடை: பாரதியார்


126. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்

விடை:  நா.காமராசன்


127. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன்

விடை: மாதவி


128. மணிமேகலைக்கு துறவு தந்தவர்

விடை: அறவண அடிகள்


129.பால் மர காட்டினிலே நாவலாசிரியர்

விடை:  அகிலன்


130.பாலும் பாவையும் நாவலாசிரியர்

விடை: விந்தன்


131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர்

விடை: ஒட்டக்கூத்தர்


132. ஈரசைச் சீரின் வேறுபெயர்

விடை: ஆசிரிய உரிச்சீர்


133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர்

விடை: பொன்முடியார்


134.உ.வே.சா வின் ஆசிரியர்

விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை


135. உட்கார்ந்து எதிரூன்றல்

விடை: காஞ்சி


136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர்

விடை: திருமூலர்


137. உண்டாட்டு

விடை: கள்குடித்தல்


138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர்

விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல்

விடை: புறநானூறு


140. உண்பவை நாழி, உடுப்பவை இரண்டே என்று பாடியவர்

விடை: நக்கீரர்


141. உமைபாகர் பதிகம் பாடியவர்

விடை: படிக்காசுப் புலவர்


142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர்

விடை: பாரதியார்


143. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது

விடை:  தலையொடு முடிதல்


144. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது

விடை: பாண்பாட்டு – தும்பை


145. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர்

விடை: நக்கீரர்


146. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்

விடை: திருக்கோலக்கா


147. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்

விடை: திருப்பெருந்துறை


148. உரிச்சொல் நிகண்டு எழுதியவர்

விடை: காங்கேயர்


149. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது

விடை: ஒழுக்கம்


150. உரை நூல்களுள் பழமையானது

விடை: இறையனார் அகப்பொருள் உரை – நக்கீரர்


151.இல்லாண்மை எனும் நூலாசிரியர்

விடை: கனக சுந்தரம் பிள்ளை